சிதம்பரம், செப். 22- 14-09-2026 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் பொன்னுசாமி திருமண அரங்கத்தில். மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
மாநில இளைஞர் அணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் மழவை கோவி.பெரியார் தாசன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி.சிலம்பரசன், புவனை ஒன்றிய தலைவர் இராமலிங்கம், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, குமராட்சி ஒன்றிய தலைவர் அர்ஜுனன், பெரியார் படிப்பகத் துணைத் தலைவர் கலைச்செல்வன், பெரியார் படிப்பகச் செயலாளர் நீதிராஜன், நகரத் தலைவர் செல்வரத்தினம், மாவட்ட மகளிர் அணித் தலைவர் சுமதி பெரியார்தாசன், ரவிச்சந்திரன், வலசைக்காடு வீரமணி, சுந்தரமூர்த்தி, வாசன், அஸ்வின், தீனா, இரா.சத்தியப்பிரியன், அபிஷேக், வி.வேல்முருகன், கு.அன்புவேலன் மு.குகன், க.கதிரவன், ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
அ.செங்குட்டுவன், இறுதியாக நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செப்டம்பர்-3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் -25 திருமுட்டம் கடைவீதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் தெருமுனை கூட்டம்.
செப்டம்பர் 27- மாலை காட்டுமன்னார்குடியில் பெரியார் பட ஊர்வலம்.
செப்டம்பர் -27 சேத்தியாதோப்பு (அல்லூரில்)
பெரியார் கொள்கைக் குடும்பங்கள் சந்திப்பு ஒன்று கூடல் (குடும்ப விருந்து)
அக்டோபர்-3 சிதம்பரம் மாவட்டம் சார்பில் “பெரியார் கேட்கும் கேள்வி” புத்தகம் பரப்புரை செய்தல்.
மேற்கண்ட நிகழ்வுகளை சிதம்பரம் கழக மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்:
காட்டு மன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழகம்.
ஒன்றியச் செயலாளர் மா.பஞ்சநாதன்,
ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன்,
இளைஞரணி
மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி.சிலம்பரசன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. சத்திய பிரியன்,
திராவிட மாணவர் கழகம்:
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிஞன்,
மாவட்ட மாணவர் அணி செயலாளர் ப. அஸ்வின்,
அரசு கலைக்கல்லூரி: மாணவர் கழக அமைப்பாளர் தீனா,
பகுத்தறிவாளர் கழகம்: மாவட்ட துணைத் தலைவர் இரா.வாசன்,
தகவல் தொழில்நுட்ப அணி: மாவட்ட அமைப்பாளர்
க.கதிரவன்.
