மீண்டும் டங்ஸ்டன் ஆய்வா? கிராம மக்களிடையே பதற்றம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மேலூர், செப். 22- மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டி பகுதியில் உள்ள கரும்பாறைகளில் கடந்த சில நாட்களாக இந்திய புவியியல் துறை ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள், சம்பந்தப்பட்ட குழுவினரிடம் கேட்ட போது, கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம் உள்ளிட்ட பரந்த பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபுவிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் டங்ஸ்டன் ஆய்வு மீண்டும் கையில் எடுக்கப்படுகிறதா என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *