நான் ஒரு பகுத்தறிவுவாதி. நான் பகுத்தறிவுவாதி என்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களிடையே நிலவிவரும் மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென்கிற சீர்திருத்தவாதி, ஆனதால் எனக்கு மதம் – கடவுள் – புராணப் பற்றோடு நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இலக்கண இலக்கியப் பற்று கிடையாது.
மனிதப் பற்று – சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்குண்டு. அந்தச் சமுதாய இழிவு ஒழியவும் மானமற்ற இழிநிலை போகவுமே நான் தொண்டாற்றி வருகிறேன். இதன் மூலம் நான் எதிர்பார்ப்பதெல்லாம் நம் சமுதாய மக்கள் மற்ற உலக மக்களைப் போல இழிவற்று மானத்தோடு, அறிவோடு, நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான்.
– தந்தை பெரியார். ‘ விடுதலை 07.08.1969
