பெரும் படை புறப்படு இனத்தினைக் காத்திட

1 Min Read

நாட்டைக் காக்க சுற்றி வருகுது

மோட்டார் சைக்கிள் பயணம்

நீட்டை ஒழிக்க ஓங்கி ஒலிக்குது

திராவிட மாணவர் கழகம்

 

சூத்திர மக்களை தூக்கிலிடவே நீட்டு என்னும்

சூழ்ச்சியைக் கூறவே அணிவகுப்பு

பஞ்சம மக்களைப் பலியாக்கவே நீட்டு

பயங்கரம் உணர்த்திட அணிவகுப்பு

 

பார்ப்பனர் இனத்தை டாக்டராக்கிடத் திட்டம்

பாராதிருந்தால் படுகுழியே மிச்சம்

ஆரியர் சூழ்ச்சிக்கு ஆப்படிக்கவே அணிவகுப்பு

அசந்தால் போச்சுது நம்வாழ்வு!

 

அனிதாபோல ஆயிரம் பேர்கள் இறப்பு

அய்யகோ அழிவதுவா இளங்குருத்து?

திராவிடர் இளைஞர் ஏந்திடும் நெருப்பு

நீட்டை அழித்திட எழும்பு

கரும்படைத் தலைவர் வீரமணி அழைக்கிறார்

பெரும் படை புறப்படு இனத்தினை காத்திட!

அதிரடி க.அன்பழகன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *