தன்னலமற்ற தொண்டு – இதுதான் துறவு.
ஓயாத உழைப்பு – இதுதான் தவம்.
நீரெல்லாம் அவன் வியர்வை;
தமிழகத்தின் நிலமெல்லாம்
அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று;
நம்மோர் உயர் வெல்லாம்
அவன் தந்த பிச்சை அன்றோ?
தடம் சொன்னான்: தமிழர்க்குக் கண்ணும் காதும்
தன்னறிவும் மன வலிவும் தந்தான்;
என்றும் கடன்பட்ட தமிழுலகம் நன்றி சொல்லும்!
காவியங்கள், கலைகள் அவன் பெருமை பேசும்!
– டாக்டர்
வா.செ. குழந்தைசாமி
