பெரியார் ஆசையும், குறிக்கோளும்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியாரின் இனக்கோட்பாடு குருதித் தூய்மையைப் பற்றியதல்ல வரலாற்று மரபுகளை எடுத்தாண்டாலும் கூட அவற்றிற்கு அவர் முகாமை தருவதில்லை; மொழிக்கும் அவ்வாறே! அவருடைய மனித நேயச் சமனியக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இன அடையாளத்திற்கும் இலக்கணம் தருகிறார்.

கொள்கை வழி இன உருவாக்க முயற்சியை நாம் அறியப் பெரியார் ஒருவரே மேற்கொண்ட தாகக் காண்கிறோம். அவருடைய மானுடம் தழுவிய பொதுநோக்குடன். தன்னுடைய மக்களின் நலனுக்கான குறிக்கோளை அந்த முறையால் அவரால் இணைக்க முடிகிறது. இநோ பெரியார் பேசுகிறார்:

“திராவிடர்கள் என்று நாம் யாரைக் குறிக்கிறோம் என்பதை ஓரளவுக்குத் தெரியப்படுத்துவது அவசியமாகும் என நினைக்கிறேன்.

இந்நாட்டில் வாழும் ஆரியர் தவிர்த்த மற்ற எல்லா மக்களும், முசுலீம்களும் கிறித்துவர்களும் உட்பட எல்லோரும் திராவிடர்கள் நாம். ஆரியர் தவிர்த்த என்றால், பார்ப்பனர் தவிர்த்து என்றுதான். அர்த்தம் கொள்ளவேண்டும்.

“இந்நாட்டில் வாழும் தற்காலப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறிய ஆரியர்களின் நேரான சுத்தமான சந்ததியார்கள் அல்லர் என்பது உண்மையே. ஆனாலும், அவர்களையும் திராவிடர்கள் என்று ஒப்புக் கொள்ளாமைக்குக் காரணம். அவர்களுக்கும் நமக்குமுள்ள பல்வேறு பண்பு, கலை, ஆசாரம், நடப்பு ஆகிய பல வேறுபாடுகள்தாம்.

நம் கழகத்தில் யாரையும் பிறவி காரணமாக வேறினத்தவர் என்று ஒதுக்கவில்லை; பழக்க வழக்கங்களைப் பார்த்துதான். அவர்களுக்கும் நமக்கும் இருந்து வரும் அடிப்படைப் பேதத்தை கருதி தான் பிரிவினை செய்கிறோம்

தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வந்தால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதைமுதலில் கத்தரித்துக் கொள்’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு ஜாதி? நீ பிராமணன் அல்ல: இந்துவல்ல என்பதை ஒப்புக்கொள்?’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்பட மாட்டான்.

அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலையேது? ஜாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதுதானே நமது ஆசை. ஜாதியைக் கைவிட்டு, ஜாதி ஆசாரத்தைக் கைவிட்டு, அனைவரும் ஒன்றே என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை, நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்?

வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள்.

– கு.வெ.கி. ஆசான்

மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *