மேற்கு வங்காளத்தில் 252 மதரசாக்களை மூட அரசு உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

கொல்கத்தா, செப்.16- மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு ஆட்சியமைத்த பின், மாநிலத்தில் இயங்கும் முஸ்லிம் மதப்பள்ளிகளான மதரசாக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்பாக அங்கீகாரம் பெறாத மதரசாக்களை கண்டறியும் நோக்கில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் வழிகாட்டுதல் பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது பல மதரசாக்கள் போதிய ஒப்புதல்களை பெறாமலும், உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவும் இருப்பதாகச் சொல்லப்பட்டு 252 மதரசாக்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 100 மதரசாக்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதற்கு மதரசாக்கள் வழங்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சுதிராம் துடு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *