அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் சாத்தியக் கூறுகளை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.16- மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிபாரதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

வணிகவியல் பாடப்பிரிவு தொடர்ந்து செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பிளஸ் ஒன் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் சாயல்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சூவர் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நாப்கின் இயந்திரங்கள் நிறுவன வேண்டும். காலியாக உள்ள காவலர், தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இணைய வழியில் வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கலாம். ஏனென்றால் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப் பட்டு வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்த முடிகின்றன.

இதனால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு இணையவழிக் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் இருந்து வாரத்தில் சில நாட்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகளை நடத்த இயலும் என்ற நிலை ஏற்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதே போல், “காணொலி மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான பிற மாற்று வழிகளையும் ஆராயலாம். அது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கலாம்” என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு தரப்பு வரும் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *