பையூர், செப். 15- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யம் பையூர் கிளை கழகக் கலந்துரையாடல் கூட்டம் கீழ் பையூர் மதியழகன் கடையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மேனாள் மாவட்டத் தலைவர் பெ. மதிமணியன் தலைமை வகித்தார்.
காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் கிளை கழகத் தலைவர் சி. ராஜா, கழக உறுப்பினர் சி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பையூர் கிளைக் கழகச் செயலாளர் வே.சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் களாக பையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரும் திமுக ஒன்றிய அவைத் தலைவருமான இளங்கோவன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிற்றரசு, ஒன்றிய திமுக இலக்கிய அணி அமைப்பாளர் எம்.பரத், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தி.க. இளையராஜா, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பி. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூரில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளையொட்டி
செப்டம்பர் 17 அன்று மாலை 4.00 மணியளவில் பையூர் விவசாயப் பண்ணை கல்லூரி பேருந்துநிலையம் அருகிலிருந்து பெரியார் பட ஊர்வலம் மேளதாளத் துடன் தொடங்கி பேரணியாகச் சென்று அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக நன்றி பெருவிழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
