காவேரிப்பட்டணம் பையூரில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

பையூர், செப். 15- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யம் பையூர்  கிளை கழகக் கலந்துரையாடல் கூட்டம் கீழ் பையூர் மதியழகன் கடையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேனாள்  மாவட்டத் தலைவர் பெ. மதிமணியன் தலைமை வகித்தார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் கிளை கழகத் தலைவர் சி. ராஜா, கழக உறுப்பினர் சி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

பையூர் கிளைக் கழகச் செயலாளர் வே.சரவணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் களாக பையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரும் திமுக ஒன்றிய அவைத் தலைவருமான இளங்கோவன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிற்றரசு, ஒன்றிய திமுக இலக்கிய அணி அமைப்பாளர் எம்.பரத், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தி.க. இளையராஜா, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பி. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.

காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூரில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளையொட்டி

செப்டம்பர் 17 அன்று மாலை 4.00 மணியளவில்  பையூர் விவசாயப் பண்ணை கல்லூரி பேருந்துநிலையம் அருகிலிருந்து பெரியார் பட ஊர்வலம் மேளதாளத் துடன் தொடங்கி பேரணியாகச் சென்று அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக நன்றி பெருவிழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *