அடுத்த பிரிக்ஸ் மாநாடு 2027-இல் சீனாவில்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.14 பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்றன. இந்தப் பிரகடனத்துக்கு மாநாட்டின் கடைசி நாளான நேற்று (13.9.2026) ஒப்புதல் வழங்கப்பட்டது.

2027-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க உள்ளது. கடைசி நாள் மாநாட்டில், 2027-ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக் கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்த உள்ளது. இதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டில்லி பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொண்டதற்காக நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார்.

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்புகிறார். இதற்காகப் பிரிக்ஸ் பிளஸ் திட்டத்தைக் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே அவர் முன்மொழிந்தார். தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்பின் நட்பு நாடுகளாக இருக்கும் 10 நாடுகள் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இராக், மடகாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன. இந்த மாநாட்டில் ‘கிரேட்டர் பிரிக்ஸ்’ உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. சீன ஆதரவுடன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

ஆனால் இந்தியாவின் எதிர்ப்பால் அந்த நாடு கூட்டமைப்பில் சேர்க்கப் படவில்லை. டில்லி மாநாட்டில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதோடு தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என்று பன்னாட்டு அரசியல் நோக் கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *