புதுடில்லி, செப். 14- டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இதில் உலகளா விய மனித உரிமை சாம்பியன் என்ற முறையில் பிரதமர் மோடியின் பேச்சு அமையவில்லை என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஜவஹர்லால் நேரு காலம் முதலே, இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறது. இருப்பினும் சுமார் 22,000 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்ட காசா பற்றி நமது தரப்பிலி ருந்து எதுவும் கூறவில்லை. மேலும் ஈரானின் தலைவர் கொல்லப்பட்டது.
ஒரு பள்ளிக்குள் சுமார் 150 மாணவிகள் கொல்லப்பட்டது குறித்தும் ஒரு வார்த்தை கூட இல்லை’ என அதிருப்தி தெரிவித்தார். மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தும் இதை பேசாதது ஏமாற்றமளிப்பதாக கூறிய அவர், நாற்காலி கிடைத்தும், நமது வாய் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இது ஏழை நாடு நம்புங்கள்!
சபரிமலை அய்யப்பன் கோயில்
மண்டல பூஜை விழாவுக்கு ரூபாய் 551 கோடி ஒதுக்கீடாம்!
மண்டல பூஜை விழாவுக்கு ரூபாய் 551 கோடி ஒதுக்கீடாம்!
திருவனந்தபுரம், செப். 14- சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை-மகர விளக்கு விழா நவம்பர் மாதம் மத்திய பகுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் வாரம் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கி உள்ளது.
இந்த பணிகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ரூ.551.5 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கேரளம் முதலமைச்சர் சதீசன் தெரிவித்து உள்ளார். மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பஷீர், சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் இந்த தொகையை அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதன்பேரில் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் கூறினார். முன்னதாக, மண்டல பூஜை-மகர விளக்கு நிகழ்வுகள் சுமுகமாக நடைபெறுவதற்கு தேவசம்போர்டுடன் இணைந்து மாநில அரசு பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
