அக்.6 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூா், செப். 14- வங்கி ஊழியா்களின் வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றா விட்டால் செப். 28 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று (13.9.2026) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வங்கிகளில் இன்றைக்கு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும், வியாபாரமும் அதிகரித்து வேலைப்பளு கூடுதலாகியுள்ளது. அதற்கேற்ப ஊழியா்கள், அலுவலா்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தற்போது மாதத்தில் 2 சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இரு சனிக்கிழமைகள் வங்கிகள் செயல்படுகின்றன. இதை மாற்றி 4 சனிக்கிழமைகளும் விடுமுறை வேண்டும் எனக் கோரி வருகிறோம்.

செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள குறை பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம்.

எங்களுடைய கோரிக்கை இன்னும் ஏற்கப்படாததால் செப். 28, 29, 30 ஆம் தேதிகளில் தொடா்ந்து வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித் திருக்கிறோம்.

தொழிலாளா் நல ஆணையா் முன் செப். 22ஆம் தேதி சமரசப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் நிச்சயமாக நாங்கள் பங்கேற்போம்.

ஒன்றிய அரசு பேச்சு வார்த்தையில் எந்தவித சுமூக முடிவும் எடுக்கவில்லை என்றால், 3 நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பின்னரும் நிர்வாகமும், அரசும் எங்களது பிரச்சினையை தீா்க்க வில்லை என்றால் அக். 26-ஆம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்துக்குத் தயாராவோம்.

எனவே ஒன்றிய அரசு, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக முடிக்க வேண்டும் என்றார் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடாசலம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *