சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கடலூர், செப். 14- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் நிதிக்குழு, 125 பணி நிலைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு மறுஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இதனால் அதிருப்தி யடைந்த ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நாளை (செப்.15) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *