சக்தி கடவுளுக்கா – மின்சாரத்திற்கா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம், புதிதாக வாங்கிய பேருந்துக்குப் பூஜை செய்ய முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் அர்ச்சகர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் சித்தோட்கட் என்ற நகரில் தனியார் நிறுவனம் ஒன்று பணியாளர்களை அழைத்துச்செல்ல புதுப் பேருந்து ஒன்று வாங்கி உள்ளது. அதற்குப் பூஜை செய்ய பார்ப்பானை அழைத்துள்ளார்கள். புதுவண்டி என்றால், அதற்கு மாலை போட்டு, தேங்காய் உடைத்து பூஜை செய்வார்கள், ஆனால், இந்தப் பார்ப்பானோ பேராசைக்காரர் போலும்! வண்டியைச் சுற்றி வந்து பூஜை செய்ததும் போதாது என்று வண்டி மேலே ஏறி பூஜை செய்ய முனைந்துள்ளார்; ஆனால், பேருந்திற்கு மேலே உயர்மின்னழுத்த கம்பி சென்றுகொண்டு இருந்தது

தீபாராதனை காட்ட கையைத்தூக்கி உள்ளார். மின்சாரக் கம்பியில் கை படவே உயர் மின்னழுத்த மின்சாரம் அவர் மீது பாய்ந்த வினாடிகளில் உயிர்போய்விட்டது.  அருகிலேயே மருத்துவமனை இருந்தும் அச்சத்தில் யாருமே அவரை காப்பாற்ற முன்வரவில்லை. காவல்துறையும், தீயணைப்புத் துறையும் வந்து உடலை அகற்றும் வரை பேருந்தி லேயே தொங்கிக்கொண்டு இருந்தது அந்த உடல்! சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கையின் படி அபசகுணமாக மாறிவிட்ட இந்தப் பேருந்தைத் திரும்பக் கொடுத்து விடுவார்களா? இல்லை பார்ப்பனர் அகால மரணம் அடைந்ததால் தோஷம் கழிய மேலும் ஒரு யாகம், பூஜை செய்வார்களா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால், மூக்குக்குமேல் சினம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது!

பேருந்தில் நடந்த இந்த உயிரிழப்புக்குப் பின்னணி யில் இருப்பது என்ன?

சதா, கடவுளுடன் சஞ்சரிக்கும் அர்ச்சகனையே காப்பாற்ற சக்தியில்லாததுதான் கடவுளா?

சக்தி கடவுளுக்கா – மின்சாரத்திற்கா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *