சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.13- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ஆதரவு முகாம் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம்,  தலைமையில் நேற்று (10.09.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் (OoSC) தொடர்பான முன்னெடுப்பின் ஆய்வில் 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்டு, 2,106 குழந்தைகள் முதற்கட்டமாக சரிபார்க்கப்பட்டனர். சரிபார்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டத்தைத் தொடர்ந்து, 509 குழந்தைகள் பள்ளிகளிலும், 263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ITIs) சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் மற்றும் சிறப்பு ஆதரவு தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது.

இவர்களின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN Rights Project) உள்ளிட்ட துறைகளின் சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், கல்வி வாய்ப்புகள், உரிமைகள், திறன் மேம்பாட்டு வழிகள் மற்றும் மறுவாழ்வு உதவிகள் குறித்தும், சைகை மொழி உதவி மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கண்ணாடிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு குழந்தையின் கல்வி, குடும்பம், உள-சமூக மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உளவியலாளர்கள் மூலம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மறுவாழ்வு ஆதரவு, நலத்திட்டங்களுக்கான இணைப்பு, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த திறன்களை முழுமையாக வெளிக்கொணர்வதை உறுதிசெய்யும் வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீனிவாசன் (தெற்கு), சரவண குமார் (வடக்கு), பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் முனைவர் லெஜிஸ், கல்வி அலுவலர் ஜெ.வசந்தி, தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர்கள், சமூக அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *