இசக்கி சுப்பையாவை விரட்டியடித்த மக்கள் த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.விற்கு நேர்ந்த கதி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி, செப்.13- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி செய்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இசக்கி சுப்பையா மிரட்டுவது போல் சைகை காண்பித்ததால் கொதித்துப்போன மக்கள் ‘ஓடு.. ஓடு..’ என்று கூறி அங்கிருந்து விரட்டினர்.

திருநெல்வேலி மாவட் டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2021, 2026 என்று 3 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. அண்மையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

இசக்கி சுப்பையாவிற்கு தவெகவில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செய லாளர் மற்றும் தென்காசி மாவட்ட அமைப்பு செய லாளர் பதவிகள் வழங்கப் பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப் பினர் பதவியை இசக்கி சுப்பையா பதவி வில கியதால் தற்போது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. விரை வில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் களமிறங்க இசக்கி சுப்பையாக தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனையால்    இசக்கி சுப்பையாவை பொது மக்கள் விரட் டியடித்த நிகழ்வு நடந் துள்ளது.

அதாவது முதலி யார்பட்டி, கோட்டை விளைப்பட்டி, அகஸ்தியர் புரம் உள்ளிட்ட கிரா மங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. நேற்று (12.9.2026) இரவிலும் நீண்டநேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள் வீதியில் இறங்கி போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆளும் தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப் பையா நிகழ்வு இடத்துக்கு வந்தார்.

பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி கூறினார். ஆனால் பொதுமக்கள் கேட்க வில்லை. இசக்கி சுப்பையாவிடம் வாக்கு வாதம் செய்தனர். திரும்பி போ.. திரும்பி போ.. என்று முழக்கமிட்டனர். ஆனால் இசக்கி சுப்பையா போராட்டக்காரர்களை நோக்கி மிரட்டும் தொனி யில் சைகை காண்பித்தார்.

இதனால் கொந்தளித்த மக்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப் போது ஒருவர், ”உங்களை நம்பி ஓட்டுப்போட்டதற்கு வேறு கட்சிக்கு சென்று விட்டீர்கள். வேறு கட்சிக்கு சென்றதாலேயே இப்படி பேச வேண்டாம். உங்களை நாங்கள் யாரும் அழைக்கவில்லை. எங்கள் பிரச்சனையை நாங்களே பார்த்து கொள்கிறோம். இங்கிருந்து ஓடி விடுங்கள்” என்றார். அப்போது அங் கிருந்தவர்கள் அனைவரும் ஓடு ஓடு என்று இசக்கி சுப்பையாவை நோக்கி முழக்கமிட்டனர். இதனால் வேறு வழியின்றி இசக்கி சுப்பையா அங்கிருந்து வெளியேறினார். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *