கட்சியில் சேர்ந்த மூன்றே நாளில் பா.ஜ., வேட்பாளரான அய்.ஏ.எஸ்.,

இணையவழி கையெழுத்து இயக்கம்

குவஹாத்தி, செப்.13- அசாமின் நகாவ்ன் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அண்மையில் பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் அய்.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில், நகாவ்ன் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட பிரத்யுத் போர்டோலோய் வெற்றி பெற்றார்.

இவர், பா.ஜ.,வில் சேர்ந்ததை அடுத்து, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து விலகினார். காலியாக உள்ள நகாவ்ன் லோக்சபா தொகுதிக்கு அக்., 6ல், இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், நகாவ்ன் மக்களவைத் தொகுதி பா.ஜ., வேட்பாளராக முன்னாள் அய்.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நகாவ்ன் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், கடந்த 3இல் விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 8இல், பா.ஜ.,வில் அவர் இணைந்த நிலையில், சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் பெற்ற சர்மா, 1992 அசாம் கேடரைச் சேர்ந்த அய்.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.

அசாமின் ஆளுநராக இருந்த எஸ்.கே.சின்ஹாவின் சிறப்பு அதிகாரியாகவும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள அசாம் பவனின் குடியிருப்பு ஆணையராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *