‘தன்மான வீரர்!’ பெரியார்
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 78 ஆவது பிறந்தநாள் விழாவினை சீரும் சிறப்புமாகக் கொண்டாடி, மகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் தந்தை பெரியார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி “தன்மான வீரர்” என்ற டாலர் பரிசளித்த நாள் இன்று (12-09-1956).
அறிவியலாளர் அய்ரீன் இயோலியட் – கியூரி பிறந்த நாள் இன்று (12-09-1897)

விஞ்ஞானத்தின் காதலர் களுக்கு மேரி கியூரியை தெரியும். மேரி கியூரியைப் போலவே அவரது மகள் அய்ரீன் ஜோலியட் – கியூரியும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது தெரியுமா…?
விஞ்ஞானி மேரி கியூரி( 1867-1934) அவரது கணவர் கியூரியோடு (1859-1906) இணைந்து 1903 -இல் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றார். அதன்பிறகு 1911 இல் அவர் வேதியியலில் சாதனை படைத்ததற்காக இரண்டாவது முறையாக நோபல் பரிசைப் பெற்றார்.
அவருக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து மறை வுற்றார். மூத்த பெண் அய்ரீன் அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார். அவர் பிறந்த நாள் இன்று (12-09-1897).
இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர் களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற அய்ரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார்.
முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம் பட்ட போர் வீரர்களைக் காப்பாற்றப் பயன்பட்டன. போர் முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மய்யங்கள் அமைக்கப்பட்டன.
அவற்றில் கதிரியக்க ஆபத்தான சூழலில் மேரியும், அய்ரீனும் பணியாற்றினர். அம்மாவை பாதித்த கதிரி யக்கம் அய்ரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக் கப்பட்டு மேரிகியூரி மறைவுற்றார். அம்மா மறைவிற்கு அடுத்த ஆண்டில் அய்ரீன் ஜோலியட் – கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட் – கியூரியோடு இணைந்து 1935 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை இவர்களது குடும்பத்துக்குக் கிடைத் துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள்.
அவர் வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார். அய்ரீன் அவரது அம்மாவைப்போலவே ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தமது 59 ஆம் வயதில் 1956 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாளில் மறைவுற்றார்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
