பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக கொண்டாடிட அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரியலூர், செப். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 8.9.2026 அன்று மாலை 6 மணியளவில்  அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து இல்லத் தில் எழுச்சியுடன் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் விடு தலை நீலமேகன், தலைமையேற்க மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.

மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

தொடர்ந்து மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா, செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தியாக. முருகன், செந்துறை ஒன்றிய துணைச் செயலாளர் தா.சுப்புராயன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெ.இள வரசன், மாவட்ட இளைஞரணி தலைவர்  லெ.தமிழரசன், கீழப் பழுவூர் கே. எம்.அன்பர சன், மணப்பத்தூர் பூ.கலை மணி, ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.மதியழகன், நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

செப்டம்பர் -3 அன்று  சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை செப்டம்பர்-17  அன்று அரியலூர் மாவட்டத்தில். கிளைக் கழகம், ஒன்றியம், நகரம் முழுவதும் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. அன்று மாலை செந்துறையில் பெரியார் பட ஊர்வலம், தெருமுனைக் கூட்டம் நடத்துதல்.

பெரியார் நடை

செப்டம்பர் -20 அரியலூரில் சமூக நீதி பயணம் “பெரியார் நடை”  (PERIYAR WALK ) நடத்து வது.

குடும்ப விருந்து

செப்டம்பர் 27 அன்று பெரியார் கொள்கை குடும் பங்கள் ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

அக்டோபர்-4 ஜெயங் கொண்டம் பகுதியில் புத்தகம் பரப்புரை. மேற்கண்ட நிகழ்வுகளை அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

புதிய
பொறுப்பாளர்:

திருமானூர் ஒன்றிய துணை செயலாளர் கே.எம்.அன்பரசன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *