லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராவை மேம்படுத்தாதது ஏன்? தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 12- ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அவற்றின் திறனை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்காதது ஏன் – என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனிதவள மேலாண்மைத் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரேசன் அரிசி கடத்தலை அனுமதிப்ப தற்கு லஞ்சம் கேட்டதாக, சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் ராமராஜன், உதவி ஆய்வாளா்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோ ருக்கு எதிராக சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் ஊழல் தடுப்புத் துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக புகார்தாரா் சக்திவேல், அவரது தாயின் கைப்பேசி பதிவுகளையும், சேலம் ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் உள்ள கேமரா பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி காவல் உதவி ஆய்வாளா் சரவணகுமார், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழ்நாடு காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்  விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தலைமை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உச்சநீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே, கண்காணிப்புக் கேமரா பொருத் துவது தொடா் பான அரசாணை பிறப்பிக் கப்பட்டது. ஆனால், கேமராக்களைப் பொருத்துவதற்கான எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் படிப்படியாக அனைத்துக் காவல் நிலை யங்களிலும் கேமராக்கள் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அதன் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னா், இது குறித்து தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *