வெள்ளலூர், செப். 10- 6.9.2026 அன்று இரவு 7.00 மணிக்கு கோவை மாவட்டம் வெள்ளலூர் பெரியார் படிப்பகத்தில் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ம.சந்திர சேகரன், தலைமை வகித்து உரை யாற்றினார். மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் ஆ.பிரபா கரன், பொதுக்குழு உறுப்பினர் இல.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தொடர்ந்து மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சி.கலைச் செல்வி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அக்ரி அ.நாகராஜன், போத்தனூர் பகுதிச் செயலாளர் இரா.கணேசன், அ.மு.ராஜா, ஒன்றியச் செயலாளர் சிவக் குமார், மகளிர் அணி திலகமணி, மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் சா.ராஜா, சுந்தரபுரம் வெற்றிச் செல்வன், இல.முத்து கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
கோவை மாநகரச் செயலாளர் க.வீரமணி, கருத்து தெரிவித்து நன்றி கூறினார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் திராவிடர் கழக ஆதரவாளர் பழனிச்சாமி, மற்றும் இளைஞரணித் தோழர் வெற்றிச்செல்வன், சகோதரர் சசிகுமார், மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.
செப்டம்பர் -3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் பங்கேற்புடன் பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் (குடும்ப விருந்து) கோவை மாவட்ட அளவில் செப்டம்பர் -27 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
