நச்சு மரங்களை முழுமையாக அகற்றிய நெடுஞ் சாலைத் துறைக்குப் பாராட்டு! வேரோடு அகற்றுக!
கடந்த ஆகஸ்ட் 22 அன்று ‘விடுதலை’ ஏட்டில் வெளிவந்த “அரசு தடைசெய்த நச்சு மரத்தை நெடுஞ்சாலைத் துறையே வளர்ப்பதா?” என்ற தலையங்கத்தில், தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலைகளின் நடுவில், கோனோகார்பஸ் என்ற நச்சு மரம் வளர்க்கப்படுவதைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். தற்போது அம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கு நமது பாராட்டுகள். ஆனால், அவை வேரோடு அகற்றப்படவில்லை. எனவே, மீண்டும் வளரும் ஆபத்து இருப்பதை நெடுஞ்சாலைத் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
