இந்து சமய அறநிலையத்துறை தனித்துறை ஆகிறது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகத்தை மேம் படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையை தனித் துறையாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் இத்துறை, ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற கூட்டுத் துறையின்கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்தது. புதிய ஆட்சி அமைந்ததும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் கீழ் அறநிலையத்துறை இணைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நிர்வாக வசதிக்காகவும், பணிகளை துரிதப்படுத்தவும், இது தனித் துறையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு தலைமைச் செயலர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலராக உள்ள வி.ராஜாராமனிடம் கூடுதல் பொறுப்பாக அறநிலையத்துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய துறை உருவாக்கத்துக்கு ஏற்ப, ‘தமிழ்நாடு அரசு வணிக விதிகள் 1978’இல் உரிய மாற்றங்கள் விரைவில் செய்யப்பட உள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை மனிதவள மேலாண்மைத் துறை மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *