திருவெறும்பூர், செப். 9- திருவெறும்பூர் ஒன்றியத் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை, மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை யொட்டிய கலந்துரையாடல் கூட்டம், செப்டம்பர் 6 ஆம் தேதி, திருவெறும்பூர் பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது.
சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆசிரியர் அவர்கள் பல திட்டங்களை வகுத்துக் தந்தார்கள். செப்டம்பர் 17, தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாளை ஒரு மாத காலத்திற்குத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது, அங்குள்ள கம்பங்களில் கொடியேற்றுவது மற்றும் பல்வேறு இடங்களிலும், தோழர்களின் வீடுகளிலும் கொடி ஏற்றுதல் என்பது புதிய வீரியத்துடன் நடைபெற வேண்டும். அதேபோல தந்தை பெரியார் பட ஊர்வலம் காண்போரை கவர்ந்திழுக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி, நகர் வலம் வர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
தலைமைக் கழகத்தின் சார்பில் தயார் செய்யப்படும் இனிப்புப் பெட்டிகளை வாங்கி தோழர்கள் தத்தம் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைவரும் வாங்கி, இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ரூபாய் 100, 200, 300, 500 ஆகிய விலைகளில் இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன. அழகிய வடிவமைப்பில் தயாராகும் அப்பெட்டியில் தந்தை பெரியார் படமும், பிறந்தநாள் செய்திகளும் இடம்பெறுகின்றன.
தொடர் கூட்டம்
அதேபோல தமிழ்நாடு முழுக்க தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவாகத் “தொடர் ஓட்டம்” (மாரத்தான்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நமது கழகத் தோழர்கள் மட்டுமின்றி பல்வேறு நண் பர்களையும் பங்குபெற வலியுறுத்தப் பட்டது. இந்தத் தொடர் ஓட்டத்திற் கான தனிப்பட்ட முறையில் ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நல்வாய்ப்பாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செப்டம்பர் 19 தஞ்சாவூரிலும், 20 திருச்சியிலும் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாகத் திராவிடர் கழகக் குடும்பச் சந்திப்புகளைத் தமிழ்நாடு முழுவதும் நடத்திட முடிவு செய் யப்பட்டுள்ளது. அதேபோல மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளும், பல்வேறு மொழிகளில் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பறைசாற்றும் காணொ லிக் கூட்டங்களும், “பெரியார் கேட்கும் கேள்விகள்” என்கிற சிறு வெளியீட்டைப் பரப்புதல் எனவும் அடுக்கடுக்கான திட்டங்களை, ஒரு மாத காலத்திற்கு நடத்திட தமிழர் தலைவர் வழிவகுத்துள்ளார்.
இவற்றை ஒன்றியத்தின் சார்பில் முன்னெடுத்து நடத்துவதும், மாவட்டக் கழகத்தின் சார்பில் இணைந்து செய்வதுமென, செயற்குழுவின் அத்துணைத் தீர்மானங்களையும் நிறைவேற்றி, தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாளை மாதம் முழுக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநிலத் தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர், ரெ.குமரவேல், பெல் ஆறுமுகம், வெ.ரூபியா, அ.சிவானந்தம், ச.கணேசன், ரெ.காமராஜ், சி.கனகராசு, ம.சங்கிலிமுத்து, க.புனிதா, பா.ரெஜினா, சு.சாந்தி, ஆபாண்டிக்குமார், அண்ணாநகர் கணேசன், மா.விஜயா, வெற்றிமணி உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வில் பங் கேற்றனர்.
