மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.9 தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் அய். பரந்தாமன், தாராபுரத்தில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முக்கிய கட்சித் தலைவர்கள் அவரது வீட்டில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து இன்று (9.9.2026) ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வரும் அக். 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடை பெறவிருக்கும் மதுராந்தகம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்குரைஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான அய். பரந்தாமன் போட்டியிடுவார். அதுபோல, தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *