மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய சட்டமன்றம் இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கனிமொழி எம்.பி.,

சென்னை, செப். 08- மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய சட்டமன்றம் இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக் கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித் திருப்பதாவது:-

வரலாறு பேச வேண்டுமென் றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதல மைச்சர் ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத் ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தி விட்டு, எதிர்வினை வந்து விடுமோ என்ற பயத்தில் விவா தத்தையே பேரவைத் தலைவர் தவிர்த்திருக்கிறார்.

கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், அண்மையில் ‘வாட்ஸ்ஆஃப் கம்பெனி’  (WhatsApp factory) பொய்களையும் கலந்து, முதல்-அமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்புக் குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டிய சட்டமன்றம், இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.

ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது… சத்தமாகச் சொல்லப்படுபவை அனைத்தும் உண்மையல்ல! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *