தஞ்சை மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், சேதுராயன் குடிக்காடு பகுதியின் ஒப்பற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் மா.இராஜப்பா (வயது 89) அவர்கள் நேற்று (6.9.2026) இரவு 9 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் நாம் துயருற்றோம்.
கொள்கையில் மிக்க உறுதி, அனைத்துக் கழகத் தோழர்கள் மற்றும் பொது வாழ்க்கையில் அனைவரும் மதித்துப் பாராட்டும் பண்பாளர். அமைதியுடனும், அடக்கத்துடனும், கட்டுப்பாடு காத்தும் கடமையாற்றும் கருஞ்சட்டைகளில் அப்பகுதியில் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த லட்சிய வீரர் அவர்!
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மற்றும் நம்மிடத்திலும், கழகச் செயற்பாட்டாளர்களிடமும் மிகுந்த கொள்கைப் பாசத்துடன் நடந்தவர்!
அவரை இழந்து துன்பமடைந்துள்ள வாழ்விணையர் தனபாக்கியம், மகன்கள் இரா.சேகரன், இரா.ரமேஷ், இரா.சுரேஷ் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இயக்கக் குடும்பத்தினருக்கும் நாம் ஆறுதல் கூறுவதுடன், அவருக்கு நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7.9.2026
சென்னை
குறிப்பு: குடும்பத்தினருக்குக் கழகத்
தலைவர் ஆறுதல் கூறினார். பெரியார் பெருந்தொண்டர் மா.இராஜப்பாவின் இறுதி ஊர்வலம் இன்று (07-09-2026) மாலை 4 மணி அளவில் சேதுராயன் குடிக்காட்டில் உள்ள இல்லத்திலிருந்து புறப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
இரா.சேகரன் (மூத்த மகன்) – 9786356942
