ஒசூர் ரிங்ரோடு தந்தை பெரியார் சதுக்கம் தொடங்கி அகர்வால் கண் மருத்துவமனை – பைபாஸ் ரோடு இணைக்கும் 100 அடி சாலையின் மய்யப்பகுதியில் “வில்வ மரம்” உள்ளது. அதை விடுத்து இரு புறமும் சாலை அமைத்தனர். அந்த வில்வ மரத்தை சிலர் வழிபாடு செய்து வந்தனர்.தற்போது அந்த வில்வ மரத்தடியில் சில சிலைகளை அமைத்து வழிபாடு செய்து வருவதால் சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறு மட்டும் அல்லாமல் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.சாலையின் மய்யப் பகுதியில் வழிபாட்டுத்தலம் அமைத்து வழிபாடு செய்து சட்டப்படி குற்றமாகும். எனவே பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக கோயில் போல கடவுள் சிலைகளை வைத்துள்ளதை ஒசூர் மாநகராட்சி அகற்றி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை பாதுகாக்க வேண்டுகிறோம். குறிப்பு: ஒசூர் வளர்ந்த நகரமாக இருப்பதால் அரசு பொது இடங்களில் ஆங்காங்கே வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதைக் கண்டறிந்து அவற்றை அகற்றி அரசு இடங்கள் எந்த காரணத்திற்காக உள்ளதோ அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு ஏற்ெகனவே ஓசூர் ஆணையாளர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சாலை நடுவிலேயே கோயிலை உருவாக்கி இடையூறு செய்ய ஒரு கூட்டம் வேலை செய்கிறது. ஓசூர் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து இதனைத் தடுத்திட வேண்டும்.
