போட்டித் தேர்வு புத்தகத்தால் அதிர்ச்சி! சுதந்திரப் போராட்ட வீரர் பட்டியலில் பிரதமர் மோடி மோடி பிறந்ததோ 1950–இல்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

யு.பி.எஸ்.சி,  ரயில்வே, வங்கி உள்ளிட்ட ஒன்றிய அரசுப் பணிகளுக் கான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று  தேர்வு தொடர்பாகப் பாடங்களை அச்சிடும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட பொது அறிவுப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெயரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் சேர்த்து அவரது அரசியல் முழக்கங்களை சுதந்திரப் போராட்ட முழக்கமாக அந்த நூலில் அச்சிட்டுள்ளனர்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள “சுதந்திரப் போராட்ட வீரர்களும் அவர்களது முழக்கங்களும்” என்ற அத்தியாயத்தில் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற தியாகிகளின் பெயர்களுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ ‘அச்சே தின்’ ‘மேக் இன் இந்தியா’ ‘பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்’ ஆகியவை சுதந்திரப் போராட்ட முழக்கங் களாகச் சுட்டிக்காட்டப் பட்டு, அதற்குரிய கேள்வி- பதில்களும் அமைக்கப் பட்டுள்ளன.

‘இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த ஒருவர் எவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெற முடியும்?’ என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. “சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த ஒருவரை சுதந்திரப் போராட்ட வீரர் பட்டியலில் சேர்ப்பது கல்வியல்ல; வரலாற்றுப் பக்கங்களில் செய்யப்படும் தெளிவான மோசடி. ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகளுக்குப் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களை இத்தகைய தவறானத் தரவுகளைப் படிக்க நிர்பந்திப்பது அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் செயலாகும்.” என்று போட் டித்தேர்வு தேர்வர்களும், கல்வியாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசுப் பணிக்கான ஒப்பந்தங்களைப் பெற்று புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனங்கள், ஆளும் கட்சியின் புகழைப் பாடுவதற்காக வரலாற்று உண்மைகளைத் திரிப்பதாக சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாடப்புத்தகங்களில் செய்யப்படும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *