பூம்புகார் ஆழ்கடலில் மூன்றாம் கட்ட அகழாய்வு தொடக்கம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறை. செப். 7- பூம்புகாரில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் அடித்து 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியை பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜேமோகன் நேற்று (6.9.2026) தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டறியும் வகையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 கட்டங்களாக கடல் சார் அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதில், கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டடங்கள், சுற்றுச்சுவர், சாலை உள்ளிட்ட கட்ட மைப்புகள், பானை ஓடுகள், செங்கற்கள் கண்டறியப்பட்டதுடன், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பூம்புகார் கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ஆழ்கடல் பகுதியில் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்று தொடங்கின.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொல்லி யல் துறை அமைச்சர் ராஜேமோகன், தொல்லி யல் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர், ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் முறையில் இறங்கி 3ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கிவைத்து, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கடல்சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் யதீஷ்குமார், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர் வசந்த குமார் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் என 25 பேர் கொண்ட குழுவினர், ஒரு விசைப்படகு, 2 பம்பர் படகுகளில் அதிநவீன டைவிங் கருவிகள், நீருக் கடியில் பயன்படுத்தும் கேமரா உள்ளிட்ட உபகரணங்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், பூம்புகார் துறைமுகத்தில் அமைச்சர் ராஜேமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலைப் பொக்கிஷங்கள் வரலாற்றில் பூம்புகார் தனி இடம் பெற்றுள்ளது. அகழாய்வின் போது தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், வெளி நாட்டின் பானை ஓடுகள் தென்பட்டன. பல நாடுகளின் பானை ஓடுகள் இருப்பதால், இது வணிக நகரம், பண்பாட்டுக் நகரம், கலைநகரம், மாபெரும் பொக்கிஷமான நகரமாக தெரிகிறது.

கடலுக்கடியில் கட்டுமானச் சுவர்கள், உறைகிணறுகள் தென் பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்ததற்கும், இங்கு வணிகம் நடந்ததற்கும் ஆதாரச் சான்றுகள் கிடைத் திருக்கின்றன. பூம்புகாரில் கடல்சார் அகழாய்வு தொடரும்.

உலகத்துக்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவர்களாக தமிழர்கள் இருந்தார்கள் என்ற உண்மை வெளிவரும்.

சிந்து சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தொட்டுவிடும் தொலையில் உள்ளோம். பூம்புகார் உலக அளவில் ஜொலிக்கும் என தெரிவித்தார்.

மேலும், “மழையில் நெல் மூட்டைகள் நனைந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக ஆசிரியர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும்.

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் தெரிவித்தார். தவெக மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கடலில் படகுப் பயணம் மேற்கொண்டதில் அமைச்சர் சோர்வடைந் ததால், தரங்கம் பாடி பகுதியில் ஆய்வு செய்யும் பணி ரத்து செய்யப் பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *