பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை! ஒன்றிய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 7-  பிளாஸ்டிக் டெக்னாலஜி தொடர்பாக டிப்ளமா படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசின் சிப்பெட் கல்வி நிறுவனம் அறிவித் துள்ளது.

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சிப்பெட்) கல்வி நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் திரு.வி.க. தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது..

இந்த நிறுவனம், பிளாஸ்டிக் மோல்ட் இன்ஜினியரிங் டிப்ளமா, பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்ளமா படிப்பு களை வழங்கி வருகிறது.

3 ஆண்டு கால டிப்ளமா படிப்பில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களும் ஒன்றரை ஆண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பில் பொறியியலில் டிப்ளமோ (மெக்கானிக்கல், பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்) முடித்தவர் களும் சேரலாம்.

மேற்கண்ட டிப்ளமா படிப்புகளுடன் லேட்ரல் என்ட்ரி முறை யில் பிளாஸ்டிக்ஸ் மோல்டு டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி டிப்ளமா படிப்புகளையும் வழங்கி வருகிறது.

இரண்டு ஆண்டு கால இந்தப் படிப்புகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் (இயற்பியல் வேதியியல், கணிதம் பாடங்கள் படித்தவர்கள்) எஸ்எஸ்எல்சி-யைத் தொடர்ந்து 2 ஆண்டு கால அய்டிஅய் படிப்பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், ஃபிட்டிங், பிளாஸ்டிக், பாலிமர், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் படித்தவர்களும் சேர தகுதியுடையவர் ஆவர்.

தற்போது மேலே குறிப்பிடப்பட்ட டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது.

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர் கள் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் சிப்பெட் நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று உடனடியாக சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94449-19183, 9363866518 ஆகிய கைத்தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *