மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மேட்டூர், செப். 7- காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து தற்போது 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக கடந்த 1ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து இதுவரை விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்ததால் கூடுதலாக நீர் திறக்குமாறு விவசாயிகள் கோரி வந்தனர். இதனிடையே நேற்று (6.9.2026) மாலை முதல் நீர்திறப்பு விநாடிக்கு 12,000கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 8,612 கனஅடியாக இருந்த நிலையில், மாலையில் 9,709 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் 92.39 அடி யாகவும், நீர் இருப்பு 55.42 டிஎம்சியாகவும் இருந்துவருகிறது.

இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,500 கனஅடியாக பதிவான நீர்வரத்து, நேற்றும் மாற்றமின்றி 8,500 கனஅடியாகவே தொடர்ந்தது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *