கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.9.2026

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மகாராட்டிராவில் விஎச்பி-யின் ‘ஹிந்துக்கள் மட்டும்’ கர்பா உத்தரவு சர்ச்சை: வி.எச்.பி. அமைப் பின் உத்தரவால் கர்பா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என்றும், ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது; இதற்கு சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. ரயீஸ் ஷேக் கடும் எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தோல்விகளை மறைக்கவே அவமதிப்பு: மோடிக்கு கார்கே பதிலடி: வேலையின்மை, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தனது அரசின் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சித் தலைவர்களைப் பெயரிட்டு பிரதமர் மோடி விமர்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.

* “சத்ரன் கி கூஞ்ச் இன்னும் அதிகமாக ஒலிக்கும்” – ராகுல் காந்தி: மகாராட்டிராவில் போராட்டம் நடத்திய மாணவர்களை பாஜக அரசு துன்புறுத்துவதாக கூறிய ராகுல் காந்தி, மாணவர்களின் குரல் ஒடுக்கப்பட்டால் அது மேலும் வலிமையாக ஒலிக்கும் என்றார். வேலைவாய்ப்பு, ஆட்சேர்ப்பு முறைகேடுகள், வினாத் தாள் கசிவு, கல்விச் செலவு மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து அவர் அரசை விமர்சித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு கேள்வித்தாளை மாற்ற வேண்டும்: அசோக் கெலாட்: மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு கேள்வித்தாளில் மாற்றம் செய்து புதிய வடிவத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு.

* “திறந்த முறையிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்”, ஜே.கே.பஜாஜ்:  கணக்கெடுப்பில் ஜாதிப் பெயர்களை திறந்த முறையில் பதிவு செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும்; செயற்கை நுண்ணறிவால் பின்னர் ஏற்படும் பிழைகளை சரி செய்ய முடியாது என ரோஹினி ஆணைய ஓபிசி குழு உறுப்பினர் ஜே.கே. பஜாஜ் தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட தனித்தனி ஜாதிப் பெயர்களை பின்னர் ஒன்றிணைக்க கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு சட்ட அதிகாரம் இல்லை; எனவே முன்கூட்டியே ஒழுங்குபடுத்தப்பட்ட பட்டியல் அவசியம் என கருத்து.

* தாழ்த்தப்பட்டோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினருக்கு 75% இடஒதுக்கீடு: சித்தராமையா: தாழ்த்தப்பட்டோர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினருக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார். மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளிலும் இதே அளவிலான பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும்; அரசியல் சமத்துவமே சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் என பேச்சு.

தி இந்து:

* சரியான ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நாடு முழுவதும் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்த வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி மக்களின் சமூக–பொருளாதார நிலையை அறிந்து, உரிய இடஒதுக்கீட்டுக் கொள்கையை உருவாக்கி, அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என ‘எக்ஸ்’தளத்தில் பதிவு.

* தமிழ்நாடு மாநில திட்டக்குழுவை கலைக்க தவெக அரசு பரிசீலனை: தமிழ்நாடு மாநில திட்டக்குழுவை (STATE PLANNING COMMISSION) கலைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மரபுப்படி, பதவியில் இருக்கும் முதலமைச்சர் மாநில திட்டக்குழுவின் பதவி வழித் தலைவராக இருப்பார்.

தி டெலிகிராப்:

* ‘சூத்திரர்கள் சேவை செய்ய வேண்டும்’ என்ற சுவரொட்டிக்கு அய்.அய்.டி. மண்டி கண்டனம்: ஜன்மாஷ்டமி விழாவின்போது அய்.அய்.டி. மண்டி வளாகத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘SHUDRAS SERVE’ சுவரொட்டிக்கு நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சுவரொட்டியைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் இயக்குநர் குறிப்பிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘கிரீமிலேயர்’ விவகாரத்தில் மோடி அரசின் இரட்டை நிலை:  பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் குடும்பங்களில் ஓபிசி ‘கிரீமிலேயர்’ நிர்ணயிக்கும் போது ஊதியத்தை வருமானத்துடன் சேர்க்கக் கூடாது என்ற ரோஹித் நாதன் தீர்ப்பை தெளிவுபடுத்துமாறு ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. ஆனால், இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான், மார்ச் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ஒன்றிய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் (CAT) தெரிவித்திருந்தது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *