அறந்தாங்கியில் தந்தைபெரியார் 148ஆவது பிறந்தநாள்விழா பட ஊர்வலம்! கீரமங்கலத்தில் தந்தை பெரியார் பிறந்நாளைமுன்னிட்டு மாரத்தான் நடத்த முடிவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அறந்தாங்கி, செப். 7- 5.9.2026 அன்று  மாலை அறந்தாங்கி நகர கழகத் தலைவர் வேல்சாமி இல்லத் தில்  மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர்  க.மாரி முத்து தலைமை வகித்தார்.

தொடக்கத்தில் மாவட்ட கழகச் செயலாளர் செகதை இரா.குமார் 11.9.2026இல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் விடுத்த அறிக்கையினை வாசித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழாவை நன்றித் திருவிழாக நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அன்புக்கட்டளை நிறைவேற்றுவதை விளக்கி சிறப்புரையாற்றினார்.

பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில அமைப்பாளர் கறம்பக்குடி க.முத்து, மாவட்ட ப.க தலைவர் க.வீரையா, பொதுக்குழு உறுப்பினர்கள்வே.அமுதா, நெய்வத் தளி த.சவுந்தர்ராசன், அறந்தாங்கி நகரச் செயலாளர் வழக்குரைஞர் இரா.குமார், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் க.முருகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உ ரந்தை க.கபிலன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தந்தை பெரியார் பிறந்தநாள் மகிழ்வாக அடையாறு ஆனந்த பவனில் 100 இனிப்பு பெட்டி வாங்கி நண்பர்களுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரி கணக்கெடுக்காமல் சூழ்ச்சி செய்வதைக் கண்டித்து 11.9.2026 அன்று கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மாணிக்கப்பட்டது. அறந்தாங்கி நகரத் தலைவர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *