இனமானப் பெருவிழாவை இனிப்போடு கொண்டாடுவோம்! காரைக்குடி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காரைக்குடி, செப். 7- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணி வண்ணன் கடவுள் மறுப்புக் கூறி வரவேற் புரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, கழகச் சொற் பொழிவாளர்
தி. என்னாரெசு பிராட்லா, மாவட்டத் தலைவர் வைகறை ஆகியோர் உரையாற்றினர்.

அறிவாசான் தந்தை பெரியா ரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பலவான்குடியில் ஆண்டு தோறும் நடைபெறும் கழகக் கொடியேற்றி, சர்க்க ரைப் பொங்கல் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொதுக்குழு உறுப்பினர் ஆ. சுப்பையா, காளையார் கோயில், அமராவதிபுதூர், தேவகோட்டை, சருகணி, சமத்துவபுரங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஒன்றிய தி.க., ப.க. பொறுப்பாளர்கள், கல்லல் ஆலம்பட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கும் நிகழ்வை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கும் கல்லல் ஒன்றிய கழக அமைப்பாளர் கி.சங்குநாதன் ஆகியோரின் பணிகளைப் பாராட்டினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் பொறியாளர் இ. ப. பழனிவேல் தனது நன்றி கூறினார்.

பொதுக்குழு உறுப்பினர், கல்லல் ஒன்றியத் தலைவர் ஆ.சுப்பையா, காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் ஆ. பழனிவேல் ராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் முனைவர் கோபால்சாமி, காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைச் செயலாளர் இரா. முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செம்பனூர் கே. எஸ். நடராஜன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துத் தீர்மானிக் கப்படுகிறது.

அறிவாசான் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாள் திருவிழாவை மாவட்டம் முழுவதும் எழுச்சியோடு நடத்துவதெனத் தீர் மானிக்கப்படுகிறது.

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஏடுக ளின் சந்தாக்களைத் தவறாமல் புதுப்பிக்கத் தீர்மானிக்கப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *