கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

05.09.2026 சனிக்கிழமை
மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: மாலை 5.30 மணி *இடம்: தந்தை பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர், ஒசூர் * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்கள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் குறித்து * மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் சார்ந்த அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும் * அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) * மா.சின்னசாமி (மாவட்டச் செயலாளர்)

Contents
05.09.2026 சனிக்கிழமை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்06.09.2026 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்கோவை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்மத்தூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்திருப்பூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்07.09.2026 திங்கட்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்தருமபுரி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்15.09.2026 செவ்வாய்க்கிழமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா

06.09.2026 ஞாயிற்றுக்கிழமை
சேலம் மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 4:00 மணி *இடம்: பெரியார் பகுத்தறிவு நூற்றாண்டு மண்டபம், அம்மாபேட்டை, சேலம் * வரவேற்புரை: மூனாங் கரடு பெ.சரவணன் *தலைமை: வீரமணி ராஜூ *முன்னிலை: கி.ஜவகர் காப்பாளர் * வழிகாட்டுதல் சிறப்புரை: ஊ.ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர் * பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கழக வளர்ச்சி செயல்பாடுகள், கழக ஆக்கப் பணிகள், விடுதலை நாளிதழ் சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழகம், மற்றும் மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

கோவை மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், வெள்ளலூர், கோவை  * தலைமை: ம.சந்திரசேகர் மாவட்டத் தலைவர் * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாற்றுதல், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா  *வேண்டல்: கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்  *அழைப்பு: ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)

மத்தூர் ஒன்றிய கழக
கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: மாலை 5 மணி *இடம்: மத்தூர் கலை புகைப்படம் நிலையம் * வரவேற்புரை: வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: சா.தனஞ்செயன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கி.முருகேசன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.இந்திராகாந்தி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * வழிகாட்டுதல் உரை அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) *  பொருள்: அறிவாசன் தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழா, கழகக் குடும்பங்கள் சந்திப்பு விழா, கழக ஆக்கப் பணிகள் குறித்து * அனைத்து ஒன்றிய கழக அணி பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்  * நன்றியுரை: சா.அரசுகுமார் (ஒன்றிய இளைஞரணி தலைவர்) *இவண்:  ஒன்றிய திராவிடர் கழகம் மத்தூர். கிருஷ்ணகிரி மாவட்டம்

கோபி கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

மொடச்சூர்: காலை 10 மணி *இடம்: கோபி-மொடச்சூர் (மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லம்)  *சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் விழா, கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

திருப்பூர் கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம் (கலைஞர் பேருந்து நிலையம் *சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் விழா, கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

07.09.2026 திங்கட்கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிரணி,
மகளிர் பாசறைத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: தமிழர் தலைவர் கூடம், குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை:  அ.வெ.முரளி (தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்) * முன்னிலை:  முனைவர் காஞ்சி பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ந. சிதம்பரநாதன் (காஞ்சி மாநகர கழகத் தலைவர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கி.இளையவேள் (காஞ்சி மாவட்டச் செயலாளர்) * பொருள்:அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் * விழைவு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி,  மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அணிகளின் தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

மன்னார்குடி கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் விழா, கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *இவண்: ஆர்பிஎஸ் சித்தாத்தன் (மாவட்டக் கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்)

தருமபுரி கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மதியம் 2 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சாரப் பணிகள் *தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்) *வழிகாட்டுதல் உரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *கருத்துரை: பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).

15.09.2026 செவ்வாய்க்கிழமை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா

சிறீமுஷ்ணம்: காலை 11 மணி *இடம்: பள்ளி கணினி ஆய்வகம், ஆனந்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிறீமுஷ்ணம், கடலூர் *தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் பொன்மொழிகள் ஒப்புவித்தல் போட்டி *1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் *பரிசுகள்: பரிசு நூல்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், இனிப்புகள் வழங்கப்படும் *இங்ஙனம்: தலைமை ஆசிரியர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *