கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

5.9.2026 சனிக்கிழமை
இராமநாதபுரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இராமேசுவரம்: காலை 10.30 மணி *இடம்: உதயா தங்கும் விடுதி, இராமேசுவரம் *வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல்  *நன்றியுரை: ஜான் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).

அறந்தாங்கி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கீரமங்கலம்: மாலை 4.00 மணி *இடம்: அன்னை விழா அரங்கம், கீரமங்கலம் *வரவேற்புரை: ச.குமார் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: க.மாரிமுத்து (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.இளங்கோ, க.முத்து, த.சவுந்தராஜன், க.வீரையா *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: ப.மகாராஜா (மாவட்டத் துணைச் செயலாளர்).

6.9.2026 ஞாயிற்றுக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட
திராவிடர் கழக, பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

செங்கல்பட்டு: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், ராட்டினக் கிணறு, செங்கல்பட்டு * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகம், விடுதலைச் சந்தா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் * தலைமை: அ.செம்பியன் மாவட்டத் தலைவர்
* வரவேற்புரை: ம.நரசிம்மன் மாவட்டச் செயலாளர் * ஒருங்கிணைப்பு: மா. சமத்துவமணி மாவட்டக் காப்பாளர் * தொடக்க உரை: சே. சகாயராஜ் (மாவட்டத் தலைவர்), லோ.குழல் குமரன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
* நன்றியுரை: பொன்.ராஜேந்திரன் (நகரத் தலைவர்)
* கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.

மதுரை புறநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: காலை 9 மணி *இடம்: மாவட்ட தலைவர் எரிமலை இல்லம், கூடல் நகர், மதுரை * வரவேற்புரை: மஞ்சுளா எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்) * முன்னிலை : பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில தலைவர்), பெ.பாக்கியலட்சுமி (மகளிரணி மாநில அமைப்பாளர்), இரா.கலைச்செல்வி (மதுரை புறநகர் மகளிரணி தலைவர்) * கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) *வழிகாட்டுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன்  (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவது தொடர்பாக * நன்றியுரை: வேல்முருகன் (திராவிட மாணவர் கழகம், கூடல் நகர், மதுரை புறநகர் மாவட்டம்).

ஆத்தூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: காலை 11 மணி *இடம்: டிவி சவுண்ட் சிஸ்டம், பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் *தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: நி.சேகர் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்), இரா.விடுதலைச் சந்திரன் (மாவட்டக் காப்பாளர்) *வழிகாட்டிவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: வா.தமிழ்ப்பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர், ப.க.), வா.முருகானந்தம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.அறிவுச்செல்வன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை, பிரச்சாரப் பணிகள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *