வாலாசாபேட்டை, செப். 5- நேற்று (4-9-2026) மாலை 5 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர்கழகம் சார்பில், வாலாசாபேட்டை ந.இராமு அலுவலகத்தில் மாவட்ட ப. க. தலைவர் த.க.பா.புகழேந்தி தலைமை யில் மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமு, மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், மாவட்ட செயலாளர் செ.கோபி ஆகியோர் முன்னிலையில் தந்தைபெரியார் 148ஆவது பிறந்தநாள் விழாவை எப்படியெல்லாம் சிறப்பாக தமிழர் தலைவர் வழிகாட்டுதல்படி நடத்து வது என மாவட்ட கலந்து ரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் கூட்ட ஏற்பாடுகளை ஏற்பாடு செய்ததோடு, நிகழ்ச்சியை அருமையாக நெறிபடுத்தினார். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மாவட்ட துணைத் தலைவர் பொன். வெங்க டேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
சிப்காட் ராஜா, ராஜேந் திரன், போ.பாண்டுரங்கன், ஆற்காடு விநாயகம், இரகு, இரா.தமிழ்வாணன், பு.எல்லப்பன், புளியங் கன்னு தேவராஜ், இராமு, விநாயகம், விஜயகுமார், தீனதயாளன், ஆலப்பாக் கம் இராவணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
