இந்திய அளவில் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம், செப். 5- மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவின் 2ஆவது ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (3.9.2026) நடைபெற்றது. ஆட்சியர் தி.சினேகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் அமல் பஹ்லேயன் பேசியதாவது:

இந்திய அளவில் வர்த்தக ஏற்றுமதியில் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் 8.29 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டம் 5.98 சதவீத வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி பங்களிப்பை வழங்கி, 2ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், ஒன்றிய அரசு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ‘நிர்யாத் புரோத்சாகன்’ மற்றும் ‘நிர்யாத் திஷா’ ஆகிய இரு திட்டங்கள் மூலம் நிதி மற்றும் நிதி சாரா உதவிகள் வழங்கப்படுகின்றன.

நிர்யாத் புரோத்சாகன் திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர் களுக்கு குறைந்த வட்டியில் வர்த்தக நிதி, ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடன்களுக்கான வட்டி மானியம், பிணைய ஆதரவு போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல் நிர்யாத் திஷா திட்டத்தின்கீழ் தரக் கட்டுப்பாடு, சந்தை வாய்ப்புகள் மற்றும் தளவாடப் போக்குவரத்து கட்டமைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன. சிறு ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இந்திய அஞ்சல் துறை வழியாக, அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் மூலமாகவே ஏற்றுமதி செய்யும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

கூடுதல் விவரங்களுக்கு www.dgft.gov.in, www.trade.gov.in, www.indiantradeportal.gov.in ஆகிய இணையதளங்களையோ மாவட்டத் தொழில் மய்ய அலுவலகத்தை 044-27238837, 044-27238551 ஆகிய எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *