தன்னை ஆசான் என குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் நன்றி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 5- ‘தனது அரசியல் ஆசான் திருமாவளவன்’ என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், “அன்பு இளவல் உதயநிதி, உணர்ச்சிவசப்படாமல், உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையிலேயே தனது கருத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருகின்றனர். எந்த தயக்கமும், நெருடலும் இல்லாமல் என்னை கொள்ளை ஆசான் என உதயநிதி கூறியுள்ளார்.
இதனை விசிகவினர் எதிர்விமர்சனம் செய்யாமல் கடந்து செல்ல வேண்டும்.” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *