ஒன்றிய அரசு துறைகள்மீது 70,584 ஊழல் புகார்கள்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 03– 2025-ஆம் ஆண்டில் அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் ரயில்வே மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகள் மீது 2025-ஆம் ஆண்டில் 70 ஆயிரத்து 584 ஊழல் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வங்கிகள் மீது அதிகபட்சமாக 9 ஆயிரத்து 933 புகார்களும், ரயில்வேமீது 9 ஆயிரத்து 381 புகார்களும் பதிவாகியுள்ளன. மொத்த புகார்களில் 64 ஆயிரத்து 905 புகார்கள் டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி முடித்து வைக்கப்பட்டன. மீதமுள்ள 5 ஆயிரத்து 679 புகார்கள் விசாரணையில் உள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6 ஆயிரத்து 531, உள்ளாட்சி அமைப்புகள் மீது 4 ஆயிரத்து 834, நிலக்கரி துறை ஊழியர்கள் மீது 4 ஆயிரத்து 118, நிதித்துறை மீது 3 ஆயிரத்து 107 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டில்லி அரசுக்கு எதிராக 2,804 புகார்கள், பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எதிராக 2,722 புகார்கள் பெறப்பட்டுள்ளன. டில்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக 2,139 புகார்கள், டில்லி காவல்துறை தவிர்த்து உள்துறை அமைச்சகம் தொடர்பாக 2,036 புகார்களும் பெறப்பட்டன.

அஞ்சல் துறைக்கு எதிராக

மனிதவள மேம்பாட்டு துறைக்கு எதிராக 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு எதிராக 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக 1,536 புகார்கள், தொலைத்தொடர்பு துறைக்கு எதிராக 1,469 புகார்களும் பதிவாகின. ராணுவ அமைச்சகம் தொடர்பாக 1,410 புகார்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்துக்கு எதிராக 1,123 புகார்கள், எக்கு துறை தொடர்பாக 1,023 புகார்கள், அஞ்சல் துறைக்கு எதிராக 1,003 புகார்களும் பெறப்பட்டன. ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள புகார்கள் விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *