சென்னை, செப்.3- நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் கிட்டப்பா அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (2.9.2026) மறைவுற்றார்.
அன்னாரது உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம், டி.வி.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
தோழர் கிட்டப்பா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குடியரசு கிட்டப்பா, சிங்கப்பூர் அதியமான், நெடுமாறன், அஞ்சி, சிங்கப்பூர்,தாமரை ஜவகர், தென்றல், ஜோஸ்வா, ஜெரால்ட், அகரன், ஜவஹர், வர்ஷினி, கவுதமன், புகழேந்தி, அகிலா, இசையமுது, பத்ரிநாத் மற்றும்
தா.பாஸ்கரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வடக்குத்து நெய்வேலி கழகத் தலைவர் கண்ணன், திருவையாறு
ஒன்றிய கழகத் தலைவர் இரவி, அறிவு, பொற்செல்வி, வளவன், பூங்குழலி, திலீபன், விழுப்புரம் ராஜா, நெய்வேலி ஞானசேகரன், மலர்விழி ஞானசேகரன் உள்ளிட்ட பலரும் அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர், தோழர் கிட்டப்பா அவர்களின் உடல் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுப் பயன்பாட்டிற்காக சென்னை லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உரிய முறையில் ஒப்படைக்கப் பட்டது.
