சென்னை, ஆக.27– மூத்த பத்திரிகையாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) மேனாள் பொதுச் செயலாளர், ‘தீக்கதிர்’ நாளிதழின் மேனாள் செய்தி ஆசிரியர், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினருமான மயிலை பாலுவின் (எஸ்.எம்.பாலசுப்பிரமணியம்) இணையர் ஆர்.உஷாராணி (வயது 72) அவர்கள் உடல் நலக்குறைவால் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 25.8.2026 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுத் தகவல் அறிந்ததும் சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றின் மேனாள், இந்நாள் நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளானப் பத்திரிகையாளர்கள் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, மயிலை பாலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உடற்கொடை
மறைவுற்ற அம்மையார் ஆர்.உஷாராணி அவர்களின் உடல் சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (27.8.2026) காலை முறையாக உடற்கொடை வழங்கப்பட்டது.
