முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கிமில் 16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கேங்டாங், செப்.3- நேபாள வெள்ள பேரிடரை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 பனிப்பாறை ஏரிகளில் சிக்கிம் அரசு ‘சென்சாரை’ பொருத்தி உள்ளது.
திபெத்தின் இமயமலைப் பகுதியில் கடந்த 26ஆம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள், மண், சேறு – சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலாப் பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் நேபாளத்தில் பனிப்பாறை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கிம் மாநிலத்தில் அதிக ஆபத்துள்ள 16 பனிப்பாறை ஏரிகள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றன.
சிக்கிம் மாநிலத்தில் பெரியது, சிறியது என 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் 16 ஏரிகள் அதிக ஆபத்துள்ளவையாக கண்டறியப் பட்டுள்ளன. அவற்றில் 13 ஏரிகள் வடக்கு சிக்கிமிலும், 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் உள்ளன.
இந்த ஏரிகளின் நீர்மட்டம் மற்றும் நீரின் அளவில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க பெரும்பாலான ஆபத்தான ஏரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் கூறுகையில், பனிப்பாறை ஏரிகளின் நீரின் அளவு அதிகரிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அதிக ஆபத்துள்ள ஏரிகள் அமைந்துள்ள வடக்கு சிக்கிமில் கண்காணிப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் “வடக்கு சிக்கிமில் ஏரிகள் பெரும்பாலும் அமைந்துள்ள பல இடங்களில், நீர்மட்டம் உயருவது குறித்து எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளையும் தானியங்கி வானிலை நிலையங்களையும் நாங்கள் நிறுவியுள்ளோம்,” என்று செவாங் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *