சகோதரி வீராங்கனை சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புஞ்சை புளியம்பட்டியின் முதுபெரும் திராவிடர் இயக்க செயல் வீரரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பேரன்பைப் பெற்ற வருமான மறைந்த மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் பி.ஏ.சாமிநாதன்    அவர்களது வாழ்விணையர் திருமதி  சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள்  (வயது 87) காலமானார்  நேற்று (1.9.2026) என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.

‘மிசா’ காலத்தில் அவரது துணைவரும், தோழர்களும் சிறைச் சாலையில் இருந்தபோது, துணிந்து வெளியே வந்து தி.மு.கழக செயல் வீராங்கனையாகப் பணிபுரிந்தவர்! தொடர்ந்து தாய்க் கழகத்திடமும் அன்புடன் தொண்டாற்றிய பெருமாட்டியாவார்.

அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பெரும் இழப்பு ஆகும்.

அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக மகன் பி.எஸ். அன்பு மற்றும் மகள்கள், உறவினர்களுக்கு நமது தேறுதல்.  மறைந்தவருக்கு நமது ஆழந்த இரங்கல்,  வீர வணக்கம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

 

சென்னை

2.09.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *