ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.2–  ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் “மாற்றம் அவசியம் தேவை” எனும் தலைப்பில் டில்லியில் நேற்று (1.9.2026) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் டி.ராஜா பேசுகையில், “மோடி பிரதமர் ஆனதில் இருந்து, நமது தேசம் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளது. அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *