ஓய்வூதியம், பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க., அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 31- ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திமுக – அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு ஊழியர் களுக்கான முழுமையான பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலிக்கப்படும், அரசு பணியாளர்களுக்கு நலவாரியம். தற்காலிக பணியாளர் களுக்கு நிரந்தரப்பணி என தவெக சார்பில் தேர்தலில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்களை கடந்த நிலையிலும் தங்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகாததால் தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் வெளிப்பாடாக, டாஸ்மாக் பணியாளர்கள் காலமுறை போராட்டத்தை அறிவித்து பின்னர் அமைச்சருடனான பேச்சு வார்த்தைக்கு பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொமுச, சிஅய்டியு ஆகிய சங்கங்கள் 25 சதவீத ஊதிய உயர்வை கோரின. இதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கியது. இதற்கு சிஅய்டியு உள்பட பல சங்கங்கள் உடன்படவில்லை.

அதேபோல், கடந்த 2025ஆம் ஆண்டு 15ஆவது ஊதிய ஒப்பந்தத் தின்படி மே.9ஆம் தேதி 6 சதவீத உயர்வை அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசு அதனை 4 ஆண்டாக அதிகரித்தது. தற்போது 16ஆவது ஊதிய ஒப்பந்தம் செப்.1ஆம் தேதி 2027ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில் விரைவில் விழாக் கொண்டாட்ட நாட்கள் வரவுள்ளதால் மற்ற தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் திமுக மற்றும் அதிமுக தொழிற் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப் படுகிறது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் அரசுக்கு அது நெருக்கடியை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *