விடுதலைநகர், ஆக. 31– திராவிடர் கழகத்தின் சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம், வரும் 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில், விடுதலை நகர், சுண்ணாம் புக்குளத்தூர் நூலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் க. தமிழினியன் தலைமையிலும், மாவட்டக் காப்பாளர் தோழர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் முன்னிலையிலும் நடை பெறுகிறது.
வரும் 17.09.2026 அன்று நடைபெறவுள்ள தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவைச் சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட உள்ளது.
மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாது பங்கேற்று, தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு முழுமையான ஒத்து ழைப்பை வழங்குமாறு மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
