தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் விழிக்கொடை செய்த குமரி மாவட்ட கழகத் தோழர்

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமானோர் விழிக்கொடை (கண் கொடை) செய்கின்றார்கள். குமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர் சசிதரன்-ஜோதிஸ்மதி ஆகியோர் விழிகொடைக்கான படிவத்தினை நிரப்பி கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்கள். இந்த தோழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாளில் உடற் கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *